விவசாயிகளுக்கு தரமான நல்ல விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என கோவை சரக விதை பரிசோதனை அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.
விதை பரிசோதனை
கோவை வேளாண் சரக விதை பரிசோதனை அலுவலர் கணேசன், திருவாரூர் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டு அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை குறித்து ஆய்வு செய்தார். பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகள் மற்றும் பெறப்படும் மாதிரிகள் உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் முழுமையாக கேட்டறிந்தார். விதை முளைப்பு திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு மற்றும் முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு தரமான விதைகள்
ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியாதவது, பணி விதை மாதிரிகள் தரத்தினை துல்லியமாக ஆய்வு செய்து முடிவுகளை வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்யலாம் என்றார். மேலும் விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு உட்படுத்தி ரூ.30 கட்டணத்தை செலுத்தி விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து கொள்ளலாம் என்றார்.
மேலும் படிக்க...
இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைப்பு!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!