நிவர் புயல் தமிழகத்தில் தீவிரமடைந்து வருவதால், பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால், மத்திய அரசின் பயிர்க் காப்பீடு (Crop Insurance) திட்டத்தில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் பயிர்களுக்கு காப்பீடு செய்து வருகின்றனர். காப்பீடு செய்ய சிரமமாக இருப்பதால், விவசாயிகளுக்கு உதவ ஒரு குழுவை ஏற்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள், ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண்துறை வாயிலாக நடவடிக்கைகள்
தற்போது, டெல்டா மாவட்டங்களில், 17 லட்சம் ஏக்கரில், சம்பா பருவ நெல் (Samba season paddy) சாகுபடி நடந்து வருகிறது. மாநிலம் முழுதும், 35.9 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. இதுமட்டுமின்றி, சிறுதானியங்கள் (Cereals), 20.3 லட்சம் ஏக்கர்; பருப்பு வகைகள், 10.5 லட்சம் ஏக்கர்; எண்ணெய் வித்துக்கள், 7.82 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. தோட்டக்கலை (Horticulture) பயிர்களும், 20 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக பயிர்கள் பாதிக்க, அதிக வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக, வேளாண்துறை வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வேளாண் குழு:
சாகுபடி செய்துள்ள விவசாயிகளை, பயிர் காப்பீடு செய்ய வைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. இதுமட்டுமின்றி, பயிர்களை பாதுகாப்பதற்கு, புயல் முன்னெச்சரிக்கை (Precaution) பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவ, உதவி வேளாண் இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகள், காலை, 9:௦௦ முதல், மாலை, 6:௦௦ மணி வரை இயங்கும். தேவை ஏற்பட்டால், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகளை இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
Krishi
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை