கோடைக் காலத்தை முன்னிட்டு மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. கடலூர், நத்தப்பட்டு கிராமத்தில் வேளாண்துறை சார்பில் மா மரங்களில் விளைச்சலை அதிகரிப்பது குறித்து வேளாண்துறை சார்பில் செயல்விளக்கம் தரப்பட்டது.
கிளை அமைப்பு மேலாண்மை
கடலூர் மாவட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் பழ மரங்களில் கிளை அமைப்பு மேலாண்மை முறை குறித்த செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. முன்னோடி விவசாயி சண்முகம் நிலத்தில் நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியில் கடலூர் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் கலந்துகொண்டார்.
மகசூல் அதிகரிக்கும்
பயிற்சி முகாமில் பேசிய பூவராகவன், மா மரங்களின் மேற்பரப்பில் உள்ள கிளைகள் சூரிய ஒளி விரிவாக படரும் வண்ணம் அமைப்பதால் மகசூல் அதிகரிப்பதுடன் பழங்களின் நிறம் மற்றும் சுவை மேம்பாடு அடையும். உயரமான மரங்களை விட கட்டுக்கோப்பான சிறிய மரங்கள் சூரிய ஒளியை நன்கு கிரகித்து பழ உற்பத்தியை அதிகரிக்க செய்கின்றன.
மேற்புற மரக்கிளைகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும் போது சூரிய ஒளியை உட்புகா வண்ணம் தடை ஏற்படுத்துவதால் மகசூல் குறைவதுடன் பூச்சி நோய் தாக்குதலுக்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. இதை தவிர்க்க முறையாக அறிவியல் முறைப்படி மரக்கிளை வடிவமைப்பை ஏற்படுத்துவது முக்கியமானது ஆகும் என்றும் விளக்கினார்.
உரமிடுதல் பயிற்சி
இதனிடையே, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் விவசாயி ஒருவர் தனது வயலில் நெல் விதைப்பதற்காக அடியுரமிட்டாா். இதில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் இளமறிவியல் இறுதியாண்டு படித்து வரும் மாணவிகள் பங்கேற்று, உரங்களை நாற்றங்காலில் தூவி உரமிடுதலைப் பற்றி நேரடியாக தெரிந்து கொண்டனா்.
மேலும் படிக்க...
மகசூலை அதிகரிக்க பயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி!
மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?