News

Wednesday, 01 May 2019 06:14 PM

 ஜெட் ஏர்வேஸ் விமான சேவை கடும் நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டது. இதனால் இதன் ஊழியர்களில் பெரும் பாலானோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பல மாதங்களாக ஊதிய பாக்கி, மருத்துவ காப்பீடு ரத்து என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைத்து முதல் கட்டமாக 250 விமான ஓட்டுனர்களுக்கு பணி நியமனம் வழங்கி உள்ளது. விமான சேவை பணிகளுக்கான ஊழியர்களை தேர்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. வெகு விரைவில் இன்னும் கூடுதலான ஊழியர்களுக்கு பணி நியமன அறிவிப்பு வரும் என எதிர் பார்க்க படுகிறது.

விஸ்திர விமான சேவையும் பெருமளவில் பணி நியமனம் செய்ய உள்ளது.  விஸ்திர நிறுவனம் என்பது இரண்டு பெரு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும். இதனை டாடா நிறுவனமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைத்து நடத்துகிறது. முதல் கட்டமாக இந்நிறுவனம் 500 ஊழியர்களுக்கு  பணி நியமனம் வழங்கியுள்ளது.  

விஸ்திர விமான சேவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்க பட்டது. தற்போது உள்நாட்டு சேவையில் மட்டும் ஈடுபட்டு வருகிறது. வெளிநாட்டு சேவையை  தொடங்கும் திட்டம் இருப்பதினால் அனுபவமுள்ள ஊழியர்களை தேர்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இன்னும் அதிக அளவில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு பணி நியமனம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)