தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததையடுத்து, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.
திமுக அமோக வெற்றி (DMK won by a landslide)
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் செய்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளியிட்டக் கருத்துக்கணிப்புகள் உண்மையாகியுள்ளன.
ராஜினாமா (Resign)
அதேநேரத்தில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.
சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்.
பிரதமர் நன்றி (Prime Minister Thanks)
இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநில நலனுக்காகவும், தமிழ் பண்பாட்டைப் பறைசாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்றுத் தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
கடினமாக உழைத்த தொண்டர்களைப் பாராட்டுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
தாமரை மலர்ந்தது (The lotus blossomed)
அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பிஜேபி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் 4 இடங்களில் தாமரை மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பதவியேற்பு எளிமையாக நடைபெறும்- தேதி ஓரிரு நாளில் முடிவு - மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!