இந்தியாவின் மில்லினியர் விவசாயி விருது (Millionaire Farmers of India) , கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் ICAR ஆதரவுடன் இணைந்து கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 12 பிராந்திய மொழிகளில் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய வேளாண் ஊடகமான கிரிஷி ஜாக்ரனின் தலைமை ஆசிரியரும் , நிறுவனருமான எம்.சி.டொம்னிக் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்று தான் விவசாயிகளை கௌரவிக்கும் MFOI நிகழ்வு.
தொடர்ந்து 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய அளவிலான MFOI நிகழ்வினைத் தொடர்ந்து வருகிற 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு உட்பட 20 மாநிலங்களில், மாநில அளவிலான MFOI நிகழ்வினை நடத்த கிரிஷி ஜாக்ரன் திட்டமிட்டுள்ளது.
MFOI வெறும் விருது வழங்கும் நிகழ்வா?
ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில்நுட்ப முறைகளை தனது வேளாண் பணிகளில் உட்புகுத்தி திறம்பட செயல்பட்டு வரும் விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பு & மீன் வளர்ப்பில் அசத்தி வரும் நபர்களையும், சிறந்த வேளாண் தொழில்முனைவோர்களையும் கண்டறிந்து அவர்களை கௌரவித்து கொண்டாடுவதே மாநில அளவிலான MFOI நிகழ்வின் அடிப்படை குறிக்கோள். இதன் மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கும் உத்வேகம் அளித்து முற்போக்கான மற்றும் லாபகரமான வேளாண் சமூகத்தை கட்டமைப்பதே இதனை முன்னெடுத்துள்ள எம்.சி.டொம்னிக் அவர்களின் தொலைநோக்கு எண்ணமாகும்.
MFOI- வெறும் விருது வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல. ஒவ்வொரு இந்திய விவசாயியையும் பெரிய கனவு நோக்கி நகர்த்த, வேளாண் பணிகளில் புதுமையினை உண்டாக்க, விவசாயிகளுக்கு முழு நிதி சுதந்திரத்தை அடைய வழிவாக்கும் முயற்சியாகும். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் 10 மில்லினியன் மில்லினியர் விவசாயிகளை உருவாக்கவும், இந்தியாவின் விவசாயத்துறை வளமான பாதையில் பயணிக்கவும், நிலையான எதிர்க்காலத்தை விவசாயிகளுக்கு உருவாக்கவும் MFOI உறுதிபூண்டுள்ளது.
Star farmer speaker:
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருட நிகழ்வில் ”நட்சத்திர விவசாயிகள்” என்கிற அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறையில் பன்மடங்கு சாதித்த விவசாயிகள் தங்கள் அனுபவங்களை நேரடியாக பகிர உள்ளார்கள். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல ஜக்கிய அரபு மற்றும் கென்யா போன்ற நாடுகளில் வேளாண் துறையில் தங்கள் முத்திரையை பதித்த விவசாயிகளும் இந்த அமர்வில் உரையாற்ற உள்ளனர்.
Global Farmers Business Network:
”இப்ப நீங்க பண்ணிட்டு இருக்கிற விவசாயப் பணியினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல கண்டிப்பா இந்த நிகழ்வு உதவும்னு நாங்க நம்புறோம்” என எம்.சி.டொம்னிக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் Global Farmers Business Network என குறிப்பிடலாம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பல்வேறு தரப்பட்ட விவசாயிகளுடன் நீங்கள் கலந்துரையாட ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள்.
இதன் மூலம் ஒருவருக்கோருவர் அறிமுகமாகி உங்களது வியாபாரத் தொடர்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. MFOI 2024 நிகழ்வானது, டெல்லியிலுள்ள IARI mela pusa மைதானத்தில் வருகிற டிசம்பர் 1,2, 3 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !