நாமக்கல் மாவட்டத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ள தமிழக அரசு, தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவருகிறது.
இதற்கிடையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சில்லறை வியாபாரம் செய்யும் மக்களும், மதுக்கடையில் மது வாங்க செல்லும் மக்களும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென நிபந்தனை உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒரு படி மேல் சென்று 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மதுபிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிபந்தனையை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புப் பலகையை அனைத்து டாஸ்மாக் கடைகளின் வாயில்களிலும் மாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க:
மீனவர்களுக்கு 90% மானியத்தில் மோட்டார் படகு! என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
மீன் வளர்ப்பு: 25000 முதலீட்டில் லட்சங்களில் சம்பாதிக்கலாம்!