News

Monday, 22 March 2021 02:32 PM , by: Daisy Rose Mary

வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள. எனவே வடிக்கையாளர்கள் வங்கி தொடர்பாக ஏதேனும் பணிகளை முடிக்க விரும்பினால் அதனை இந்த வாரமே முடித்துகொள்ளுங்கள்.

வங்கி விடுமுறை பட்டியல்

  • மார்ச் 27 - மாதத்தின் கடைசிச் சனிக்கிழமை

  • மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை

  • மார்ச் 29 - ஹோலி விடுமுறை

  • மார்ச் 30 - பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை

  • மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் முழுமையான சேவைகளைப் பெற முடியாது.

  • ஏப்ரல் 1 - வங்கிகள் வருடாந்திர கணக்குகளை மூடும் நாள் என்பதால் வங்கி சேவைகள் முழுமையாக மூடப்படும்.

  • ஏப்ரல் 2 - புனித வெள்ளி

  • 3 ஏப்ரல் - முதல் சனிக்கிழமை வேலை நாள்

  • 4 ஏப்ரல் - ஞாயிறு விடுமுறை

இதனால் மார்ச் 27க்குப் பின் நாடு முழுவதும், முழு வேலைநாளாக் ஏப்ரல் 4ம் தேதிக்கு பிறகுதான் வங்கிகள் இயங்கும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த விடுமுறை மாறுபடும்..

தமிழ்நாட்டில் வங்கி விடுமுறை

மார்ச் மாதம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ஆம் ஆகிய இரு நாட்கள் மட்டுமே வங்கிகள் விடுமுறை. இதேபோல் ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் நாள் தெலுங்கு மற்றும் தமிழ் வருட பிறப்புக் காரணமாக வங்கிகள் மூடப்படுகிறது. எனவே வடிக்கையாளர்கள் வங்கி தொடர்பாக ஏதேனும் பணிகளை முடிக்க விரும்பினால் அதனை இந்த வாரமே முடித்துகொள்ளுங்கள்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)