பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 October, 2023 1:35 PM IST
crop insurance

புதுப்பிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் விவசாயிகள் நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை மற்றும் பருத்தி பயிர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில் சிறப்பு மற்றும் ராபி பருவமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கூறிய பயிர்களில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய முன் செல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

பயிர்காப்பீடு- ஏஐசிஐஎல் நிறுவனம்:

இத்திட்டத்தை ஏஐசிஐஎல் நிறுவனம் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் மொத்தமாக 38 குறு வட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். சிறப்பு மற்றும் ராபி பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர் சாகுபடி காலமானது அக்டோபர் மாதத்தில் தொடங்குவதனால் அக்டோபர் மாதம் முதலாக பயிர் வாரியான அடங்கலுடன் பயிர் காப்பீடு பதிவு மேற்கொள்ள வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் எப்போது?

நெல்-II, சோளம், நிலக்கடலை பயிருக்கு 15.12.2023-ஆம் தேதியும், மக்காச்சோளம்-III மற்றும் பருத்தி-III ஆகியவற்றிற்கு 30.11.2023-ஆம் தேதியும் மற்றும் உளுந்து பயிறுக்கு 15.11.2023-ஆம் தேதியும் பதிவுகள் மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

பிரிமீயம் தொகை விவரம்:

பயிர் காப்பீட்டு தொகையானது, நெல் II பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.32,800, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகை ரூ.492, சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.9,400, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகை ரூ.141, மக்காச்சோளம்-III பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.29,700, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகை ரூ.445.50.

உளுந்து பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.14,000, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகை ரூ.210, நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.24,350.20, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகை ரூ.365.25, பருத்தி-III பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீட்டு தொகை ரூ.17,316.19, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகை ரூ.865.80 என்ற வகையில் பயிர் வாரியாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட இறுதிநாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும்பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் காண்க:

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்- அகவிலைப்படி 4 % உயர்வு

ஒரே நாளில் 600 ரூபாயா? தலை சுற்ற வைத்த தங்கத்தின் விலை!

English Summary: Alert to farmers of Dindigul district regarding crop insurance
Published on: 20 October 2023, 01:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now