அகில இந்திய வேளாண்மை நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி காளீஸ்வரி தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் ஆண்டு தோறும் வேளாண்மை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு அகில இந்திய அளவில்
நுழைவுத் தேர்வு நடத்துகிறது.
முடிவுகள் வெளியீடு (Entrance Results)
இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயின்ற 300 இளங்கலை மற்றும் 200 முதுகலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகள் இடம் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில், பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியைச் சேர்ந்த மு. காளீஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். செல்வி. டீ. பவித்ரா, வேளாண் சமூக அறிவியல் துறையில் இரண்டாமிடத்தையும்,செல்வி. பூஜா சக்திராம், வேளாண் பொறியியல் துறையில் மூன்றாமிடத்தையும்,கே. ஏ. அருட்செல்வம், நீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிவில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை அதிகபட்சமாக 185 இடங்களைப் பிடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
விவசாயத்தை வாழ்க்கையாகப் பார்த்தால் ஏமாற்றமே இல்லை!!
TNAU விஞ்ஞானி கே.எஸ். சுப்ரமணியத்திற்கு தேசிய விருது!
குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!