ஒவ்வொரு மாதமும் எல்லா சனிக் கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட வேண்டும் என வங்கி ஊழியர்கள் நெடுநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் அண்மையில் நாடு தழுவிய ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், இந்த கோரிக்கை நிறைவேறும் தருவாயில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒரு நிபந்தனையும் வங்கி ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
வங்கி விடுமுறை (Bank Leave)
அனைத்து சனிக் கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை விடுப்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒப்புதல் கிடைத்தால் வங்கிகளுக்கு மாதம் எட்டு நாட்கள் (எல்லா சனி மற்றும் ஞாயிறு நாட்கள்) உறுதியாக விடுமுறை கிடைக்கும். இதற்கு இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் அளித்த பின் ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி நேரம் அதிகரிக்கும்
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை விடுமுறை விடுக்கப்பட்டால் தினசரி வங்கி ஊழியர்களுக்கான பணி நேரம் உயர்த்தப்படும் என இந்திய வங்கிகள் சங்கம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தினமும் வங்கி ஊழியர்களுக்கு பணி நேரம் 40 நிமிடம் உயரும். அதாவது வங்கி ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!
ஃபிக்சட் டெபாசிட்: மூத்த குடிமக்களுக்கு வட்டியை உயர்த்தியது HDFC வங்கி!