News

Friday, 12 October 2018 12:12 PM

இந்தியாவில் விளையும் அல்பான்சோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி, சிந்து துர்கா, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் விளையும் அல்போன்சா ரக மாம்பழத்துக்கு 'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் வெளியிட்டார். இதன் மூலம், அந்த வகை மாங்கனிகளின் மதிப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேலும் அதிகரிக்க உள்ளது. இந்த வகை மாங்கனிகளுக்கு பெரும் மவுசு இருந்து வந்தாலும், இதுவரை அதற்கு புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது அந்தக் குறை நிவர்த்தியாகியுள்ளது.

    இந்தியாவில் 2004-ம் ஆண்டில் முதன்முதலாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுவரை 325 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

புவிசார் அடையாளம் கொண்ட பொருட்கள் என்பது விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். அவை அந்தப் பகுதிகளின் பாரம்பரியப் பொருட்களாகவும் இருக்கும். அந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.

டார்ஜிலிங் தேயிலை, மைசூரு சில்க், குல்லு ஷால், மதுரை மல்லிகை, பங்கனப்பள்ளி மாம்பழம், பனாரஸ் புடவைகள், திருப்பதி லட்டு உள்ளிட்ட சில பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றவையாகும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)