அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அடுத்தகட்ட முயற்சியாக தற்போது ஃப்ரஷ் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவச டெலிவரி செய்ய உள்ளது. ஆர்டர் செய்து இரண்டு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது. சோதனை முயற்சியாக பெங்களூரில் இச்சேவையை தொடங்க உள்ளது.
‘அமேசான்ஃப்ரஷ்’ என்னும் சேவை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் பொருட்கள், இறைச்சி, ஐஸ்-க்ரீம், மளிகை சாமான், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய அனைத்தையும் ஆர்டரின் பெயரில் டெலிவரி செய்யப்பட உள்ளன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த சேவை மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த சேவை பயன்படுத்தி காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ஆர்டர் செய்ய முடியும். பெங்களூரைத் தொடர்ந்து மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 49 ரூபாய் முதல் பொருட்கள் விற்கப்பட உள்ளன. 600 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரி உள்ளது. இல்லையேல், 29 ரூபாய் டெலிவரி சார்ஜ் செய்ய படும்.
நன்றி : News 18
Anitha Jegadeesan
Krishi Jagran