News

Monday, 13 June 2022 06:54 PM , by: T. Vigneshwaran

Anbil Mahesh

பள்ளி கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற லிங்க் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களிடம் புத்தகங்கள் சீருடைகள் 20 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

அதோடு பள்ளி கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்கக்கூடாது என்றும் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிகள் திறக்கும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

புதுச்சேரிக்குள் சொகுசு கப்பல் வருவதற்கு ஏன் அனுமதி இல்லை? விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)