And lower gold prices: What is the situation today?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.37,880க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.360 குறைந்து ரூ.37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 80 பைசா குறைந்து, ரூ.60.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.18,000 சரிந்து, ரூ.60,500 ஆகவும் விற்கப்படுகிறது.
மேலும் படிக்க: