தமிழக அரசின் விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கென நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 4000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் நாட்டுகோழிகள் விரைவில் வழங்ப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.
விலையில்லா ஆடு மாடு வழங்கல் திட்டம்
கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான பயனாளிகள், கிராமசபை கூட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்திற்கு 4000 பயனாளிகள் தேர்வு
கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்காக 16 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 3,784 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கப்படவுள்ளன. அதேபோல் எட்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளும் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த, 16 கிராமங்களில், 3,784 பயனாளிகள், விலையில்லா ஆடுகள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8 கிராமங்களில், 400 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.
நாட்டு கோழிகள் வழங்கவும் திட்டம்
அதேபோல், மாவட்டம் முழுவதும், 4,800 நாட்டுக் கோழிகள் வழங்கவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பயனாளர்களுக்கு அடுத்த மாதம் கால்நடை வளர்ப்பு பயிற்சி பயனாளிகளுக்கு அளிக்கப்படும். தொடர்ந்து, கால்நடைகள் கொள்முதல் செய்யப்பட்டு, ஜன., மாதத்துக்குள் பயனாளிகளுக்கு வழங்கி முடிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!
மானிய விலையில் விதை 'பாக்கெட்' - காய்கறிகள் உற்பத்தியை பெருக்க திட்டம்!!