பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் போதுமான டாலர்கள் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்வுகள் ரத்து
எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பேப்பரை பொருத்தளவில் அவை பெரும்பாலும்,வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் பேப்பரை இறக்குமதி செய்வதற்கு போதுமான நிதி இல்லாததால் பேப்பருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வு நடத்துவதற்கு போதுமான பேப்பர் மற்றும் அச்சு மை இல்லாத காரணத்தால், நடைபெறவிருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
மேலும் படிக்க...
மட்டன் சமைக்க மறுத்த மனைவி- போலீஸிடம் புகார் அளித்தக் கணவன்!
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!