News

Friday, 27 November 2020 03:33 PM , by: Daisy Rose Mary

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் 30ம் தேதி நகரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின் புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நேற்று காலை கரையை கடந்த நிவர் புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது என்றும் வானிலை மையம் இயக்குனர் கூறினார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 

இதனிடையே, ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் , அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் சோளிங்கர் (ராணிப்பேட்டை) 23 செ.மீ, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) 16 செ.மீ, பொன்னை அணைக்கட்டு (வேலூர்), வேலூர் (வேலூர்), அம்முண்டி (வேலூர்) தலா 14 செ.மீ, ஆம்பூர் (திருப்பத்தூர்), ராம கிருஷ்ண ராஜு பேட்டை (திருவள்ளூர்) தலா 13 செ.மீ, அலங்காயம் (திருப்பத்தூர்), காட்பாடி (வேலூர்) தலா 12, வாணியம்பாடி (திருப்பத்தூர்), திருபுவனம் (சிவகங்கை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 9 செ.மீ, வாலாஜா (ராணிப்பேட்டை), குடியாத்தம் (வேலூர்), விரிஞ்சிபுரம் Aws (வேலூர்) தலா 8 செ.மீ, தேவகோட்டை (சிவகங்கை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மேலாலத்துர் (வேலூர்) தலா 7செ.மீ மழை பதிவாகியுள்ளது.

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நவம்பர் 27

வடக்கு கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

நவம்பர் 28

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய நிக்கோபார் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

நவம்பர் 29 முதல் நவம்பர் 30

தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

டிசம்பர் 01

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடலோர பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

இதனால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

பெண்களே வாங்க..! உங்களுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்! - விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்! - போலீசார் விரட்டியடிப்பால் பரபரப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)