கொரோனா ஊடரங்கு காலத்தில் இணையதளப் பயன்பாட்டாளர்களைக் குறிவைத்து இ-மெயில் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக, நாடுமுழுவதும் ஊடரங்கு அமலில் உள்ளது. இதனால், ஐ.டி. ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இ-மெயில் மூலம் அலுவலகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையேயான பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
எச்சரிக்கை
இதனைப் பயன்படுத்திக் கொண்டு மோசடி இ-மெயில்களை அனுப்பி சைபர் தாக்குதல் நடத்த இணையதள மோசடியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலவச கோவிட் -19 பரிசோதனை
குறிப்பாக இந்த இணையதள குற்றவாளிகள், டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இலவச கோவிட் 19 (Covid-19) பரிசோதனை செய்வதாக கூறி இமெயில் அனுப்புவதாக தெரியவந்துள்ளது. இந்த இ-மெயில்கள் பெரும்பாலும் அரசு நிறுவனங்கள், அதிகாரிகள் அனுப்புவது போலவே இருக்கும்.
மோசடி இ-மெயில்கள் (E-Mail)
மேலும் இந்த இமெயில்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மோசடி இணையதளங்கள் அச்சு அசலாக அரசின் அதிகார பூர்வ இணையதங்கள் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே பலரும் அதனை நம்பி ஏமாறலாம்.
எழுத்து பிழைகள்
உதாரணமாக ncov2019@gov.in என்று இருக்கலாம். மேலும் அரசு அதிகாரிகளின் முகவரிகள் போலவும் இருக்கும். ஆனால் இவற்றில் எழுத்துப்பிழைகள், தவறுகள் இருப்பதை உற்று கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும். சிறிய எழுத்து வித்தியாசத்துடன் அரசு இணையதளம் போலவே அவை அமைக்கப்பட்டிருக்கும்.
திறக்க வேண்டாம்
இதுபோன்ற இமெயில்கள் வந்தால் அந்த இணையதங்களை திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். ஒருவேளை அந்த இமெயில் தகவல் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டால், இதுதொடர்பான அரசின் இணையதளத்துக்கு சென்று சரிபார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும். பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி, நிதி தொடர்பான தகவல்களை எவரிடமும் வழங்க வேண்டாம் என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதள மோசடியாளர்கள் ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணிக்காக அரசு நிதி உதவி மற்றும் நிவாரண உதவி பெற்றுத்தருவதுபோல் நடித்து பொதுமக்களையும், தொழில் நிறுவனங்களையும் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க...
PMFBY: காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி!
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!
Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!