தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை (Scholarship)
பொருளாதார ரீதியில் பின்தங்கியக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின், கல்விக்கனவை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி,1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இணையத்தில் விண்ணப்பிக்கலாம் (You can apply online)
இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கானக் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கும் மத்திய அரசின் தேசிய கல்வி தொகை இணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் திட்டத்திற்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் (Online)
தகுதி மற்றும், வருவாய் அடிப்படையில் மத்திய அரசின் தேசிய கல்வி தொகை இணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...
கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!