இந்தியாவில் ரேசன் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் ரேசன் அட்டை வைத்திருப்பது தற்போது அவசியமாகி விட்டது. இப்போது மக்கள் ஆன்லைன் வாயிலாகவே, இந்த ரேசன் கார்டினை பெறும் வசதியை மாநில அரசு வழங்கி உள்ளது.
ரேசன் கார்டு (Ration Card)
இந்தியாவில் ரேசன் கார்டின் மூலம் ஏழை மற்றும் எளிய பொதுமக்கள் மாதந்தோறும் மலிவான விலையில், உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் நிலவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் மாநில அரசுகள், ரேசன் கடையின் வாயிலாக பொதுமக்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியது.
இந்நிலையில் பலரும் ரேசன் கார்டை பெற முயற்சித்து வருகின்றனர். தற்போது ரேசன் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேசன் கார்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ரேசன் கார்டை பொதுமக்கள் அந்தந்த மாநில அரசின் இணையதளத்தின் வாயிலாக, எளிதாக விண்ணப்பித்து பெற முடியும். ஆதார் அட்டையைப் போலவே, ரேசன் கார்டிலும் அனைத்து சுய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் ரேசன் கார்டில் QR CODE முறை வரை பல அப்டேட்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள்!