இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம்: இந்திய கடற்படை
பனி: சிவிலியன் மோட்டார் டிரைவர் (Civilian Motor Driver Ordinary Grade)
காலி பணியிடம்: 104
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 18, 2019
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bit.ly/3328GvG
ஊதியம்: குறைந்தபட்சம் ரூ 19,000/- முதல் அதிகபட்சம் ரூ 63,200/- வரை
அஞ்சல் முகவரி: விண்ணப்பத்தை பிரிண்ட் (Print) எடுத்து பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஸ்பீட் போஸ்ட் (Speed post) அல்லது பதிவுத் தபால் (Registered post) மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
Flag Officer Commanding-in-Chief {for SO(CRC)}, Headquarters, Eastern Naval Command, Utility Complex, 2nd Floor, Naval Base, Visakhapatnam-530014 (Andhra Pradesh)
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும். First Line maintenance குறித்து அறிந்திருக்க வேண்டும். கனரக (Heavy) மற்றும் மோட்டார் (Motor) வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு அனுபவம் மாற்று ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி ஆனவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்களை அறிய https://bit.ly/3328GvG அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
K.Sakthipriya
krishi Jagran