தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அமைப்பு: தமிழ்நாடு வனத்துறை
பணி: வனக்காவலர்
காலிப்பணியிடம்: 564
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bit.ly/2JYegpZ, https://bit.ly/30Qprry
முக்கிய தேதிகள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 10 2019
ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஆகஸ்ட் 10 2019 , மாலை 5 மணி வரை
இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஆகஸ்ட் 12 2019
வயது வரம்பு:
பொது பிரிவினருக்கு (general) குறைந்த பட்சம் 21 வயது, அதிகபட்சம் 30 வயது.
எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி (SC/ST/OBC) பிரிவினருக்கும் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்த பட்சம் 21 வயது, அதிகபட்சம் 35 வயது.
கல்வித் தகுதி:
குறைந்த பட்சம் பொது கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
கணினி வழித்தேர்வு
உடற்தகுதி தேர்வு
உடற்திறன் தேர்வு
மொழி:
கணினி வழித்தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்
மாத ஊதியம்
தகுதியானவர்களுக்கு குறைந்த பட்சம் 16,600 முதல் அதிக பட்சம் 52,400 வரை மாத சம்பளம்.
இப்பணியிடம் குறித்து மேலும் விவரங்கள் அறிய குறிப்பிட்டுள்ள https://bit.ly/2JYegpZ, https://bit.ly/30Qprry அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
K.Sakthipriya
Krishi Jagran