சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உணவகம் அமைக்க 15.07.2023-க்குள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், ஊட்டச்சத்து குறைபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.
மேலும், சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் 15.07.2023 வரை வரவேற்கப்படுகின்றன.
சிறுதானிய உணவகம் நடத்திட கீழ்க்காணும் தகுதியுள்ள மற்றும் விரும்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் அமைவிடத்திலிருந்து 5 கிமீ சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டமைப்பு விண்ணப்பிக்கலாம்.
- மகளிர் சுய உதவிக்குழு துவங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.
- தேசிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும்.
- உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு நிதி பெற்றிருக்க வேண்டும்.
- உணவு கட்டுப்பாட்டு துறையில் FSSAI சான்று பெற்றிருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு அல்லது கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.
மேலும், இது குறித்த விரிவான விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
திட்ட இயக்குநர் / இணை இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்.
மேலும் காண்க:
ஆடி தொடங்கினால் வெங்காயத்தின் விலை குறையலாம்- சந்தை வியாபாரி நம்பிக்கை