News

Wednesday, 23 February 2022 07:41 PM , by: T. Vigneshwaran

TNPSC Group 2 Exam

TNPSC நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் , நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.

இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. கடந்த 18-ம் தேதி தேர்வுக்கான அறிவிப்பு தொடர்பாக சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் மே 21-ம் தேதி நடத்தப்படும்.

குரூப் 2,2ஏ தேர்வுக்கான முழுஅறிவிப்பு

பிப்ரவரி23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும்” எனத் தெரிவித்திருந்தார்.அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு இன்று முதல் மார்ச் 23 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் apply.tnpscexams.in, www.tnpsc.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:

வெறும் ரூ.633க்கு காஸ் சிலிண்டர் கிடைக்கும், புதிய விலை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)