பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஆலோசனையில், 2022 (ஜூலை முதல் ஜூன்) மற்றும் 2022- 23 ம் ஆண்டில் அனைத்து ராபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கி உள்ளது.
குறைந்த பட்ச ஆதார விலை
குறைந்த பட்ச ஆதார விலை உயர்வின் மூலம், கோதுமை,கடுகு, பருப்பு, உளுந்து, பார்லி மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றிற்கான உற்பத்திக்கு செலவு செய்த தொகையை விட விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என அமைச்சரவை குழு கூறியுள்ளது.
மேலும், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,015 உயர்த்தவும்,எண்ணெய் வித்துகள், கடுகுக்கான குறைந்த பட்ச விலையை, குவிண்டாலுக்கு ரூ.400 முதல் ரூ.5,050 வரை உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி!
சீசன் இல்லாத காலத்திலும் மல்லிகை சாகுபடி சாத்தியமே!