ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாட பட்டு வருகிறது. UNESCO மற்றும் சர்வதேச அமைப்புகள் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் புத்தக தினம், காப்புரிமை தினம் என்றும் கொண்டாடி வருகிறது. ஏப்ரல் 23 இல் கொன்டுவதற்கு ஒரு காரணம் உண்டு.அதாவது, உலகின் தலை சிறந்த படைப்பாளிகாளான மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகாஆகியோர்கள் இதே நாளில் காலமானார். அவர்களை நினைவு கூறவும், அவர்களின் காலத்தால் அழியாத படைப்புகளை வரும் தலை முறையினரும் அறிந்து கொள்ளவும் இந்நாள் உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது.
நம்மில் பலர் இன்று புத்தகம் வாசிக்க நேரமில்லாமல் இருக்கின்றனர். நல்ல புத்தகமென்பது ஒரு நல்ல நண்பனை போன்றது. முன்பு மக்கள் அனைவரும் வரும் புத்தக வாசிப்பை பழக்கமாக வைத்திருந்தனர்.நூலகங்கள் செல்வதை ஒரு பணியாக வைத்திருந்தனர்.நூலகங்கள் புத்தகம் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தன. இன்று நம்மில் பலர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருக்கிறோம். நம்மை பண்படுத்துவோம், சிந்தன்னையை விரிவு படுத்தவும் புத்தகம் வாசித்தல் இன்றியமையாதது.
NESCO- ன் நிர்வாக இயக்குநரான ஆட்ரே அசௌலே கூறும் போது, ஒவ்வொரு புத்தகமும் பல்வேறு மொழிகளில் பிரதியாகி விற்பனைக்கு வருகிறது. அதில் சிறந்த புத்தகதினை மற்ற மொழியினரும் படித்து பயன் பெரும் வகையில் மொழிப்பெயர்க்க பட வேண்டும் என்றார். இந்நாளில் நாம் செய்ய வேண்டியது நம் வீட்டு சிறார்களுக்கு புத்தக வாசிப்பு, அதன் முக்கியத்துவைத்தை எடுத்த கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வருடத்தை “International Year of Indigenous language” என்று UNESCO அறிவித்துள்ளது.