தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை, வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜனவரி 17-ஆம் தேதி திங்கள்கிழமை வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் 4 நாட்கள் விடுமுறையாக இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பிற்காக, தொழிலுக்காக வசித்து வருவோர், சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினரோடு பண்டிகையை கொண்டாட விரும்புவர். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்கள், இணையத்தளம் முகவரியான www.tnstc.in என்ற இணையதளத்திலும், தனியார் ஆப்களை பயன்படுத்தி பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்பட்டது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், 15,270 பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இன்று முக்கிய தகவல்வெளியாக வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ' அரசு போக்குவரத்துத்துறையின் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில், 9 வது மாடியில் உள்ள தொழில்துறை கருத்தரங்க கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்கிறார். மேலும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டார். ஆனால் இதனை உறுதியாக கூறமுடியாது. ஒருவேளை இன்று வெளியாகவில்லை என்றால், விரைவில் அறிவிக்கப்படும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க: