அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 February, 2023 5:22 PM IST
Diary Farming

கிராம பகுதிகளில் மாடு வளர்பது என்பது மிகவும் எளிதானது. ஏனென்றால் அங்கு அதற்கான உகந்த சூழல் அமைந்திருக்கும்.ஆனால் நகர பகுதியில் இருப்பவர்கள் மாடு வளர்ப்பது என்பது தற்போது இருக்கும் காலகட்டத்தில் தலைவழி பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாநகராட்சி மேயர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கியது. பிடிப்படும் மாடுகள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டன.

மேலும் அதன் உரிமையாளர்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.3000ம், கன்றுகளுக்கு 1500 ரூபாயும் அபராதம் செலுத்திய பிறகு மாடுகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறோம் எனக் கூறி 50க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே திரண்டனர். பின்னர் அங்கு மாடுகளுடன் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதுகுறித்து மாடுகள் வளர்ப்போர் கூறுகையில், "தஞ்சாவூர் மாநகராட்சியில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. நாங்கள் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். மாடுகளை வைத்து தான் எங்கள் வாழ்வாதாரம் உயர்கிறது. எங்க‌ பசங்கலோட படிப்பிற்கான கட்டணம் கூட இதிலிருந்து தான் தருகிறோம். தற்போது சுற்றித்திரியும் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் எங்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலைகளில் கால்நடையாக செல்லும் மாடுகளை பிடிக்கக்கூடாது. இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளை வேண்டுமானால் பிடிக்கலாம். அந்த காலத்தில் மேய்ச்சலுக்காக தரிசு நிலம் இருந்தது. மாடுகளை குளிப்பாட்ட அகழிகள் இருந்தது, அரசு பச்சை புற்கள் கொடுத்து, மானியத்தில் தவிடு புண்ணாக்கு கொடுத்தது. தற்போது அவை கிடையாது. ஒரு கிலோ புண்ணாக்கு ரூ.400 வாங்குகிறோம், வைக்கோல் இல்லாத நாட்களில் வெறும் தவிடு, புண்ணாக்கை தான் தருகிறோம்.

மேலும் படிக்க:

வெறும் ரூ. 30,000க்கு எலெக்ட்ரிக் பைக்குகள்

மீன் வளர்ப்புக்கு 2 லட்சம் மானியம், எப்படி பெறுவது?

English Summary: Are there so many problems in raising cows?
Published on: 17 February 2023, 05:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now