பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கிவருகிறது. இதற்கான 7- வது தவணை இந்த மாதம் வழங்கப்பட உள்ளது. நீங்கள் 7-வது தவணைக்கு காத்துக்கொண்டு இருக்கீறீர்களா, அப்போது இந்த தகவல் உங்களுக்கு தான்.
பி.எம் கிசான் திட்டம் (PM-Kisan scheme)
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருமான ஆதரவை பெருக்குவதை நோக்கமாக கொண்டு கடந்த 2019 இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலம் உள்ள அணைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் தலா ரூ.2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
7- வது தவணை எப்போது? - When is 7th-installment?
ஏற்கனவே 6 தவணைகள் முடிந்த நிலையில், மத்திய அரசு தனது 7- வது தவணையை இந்த மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தவுள்ளது. தற்போதைய தகவளின் படி, மோடி அரசு இந்த திட்டத்தின் ஏழாவது தவணையை வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருவதாகவும், விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பரிமாற்ற செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்பதால் விவசாயிகள் தங்களின் 7-வது தவணையை பெற சற்று காத்திருக்கவேண்டும். ஆனால் பணம் விடுவித்த பிறகு உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் பகுதி வேளாண் துறை அலுவலகத்தை உடனே நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள். முன்னதாக உங்கள் வங்கி கணக்கில் பணம் வரைவு வைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
பி.எம் கிசான் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
-
முதலில் pmkisan.gov.in - என்ற பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.
-
பின்னர் முகப்புப்பக்கத்தில் 'Farmers corner' விருப்பத்தைத் தேடுங்கள்
-
அதில் ‘Beneficiary status’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
பின் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுங்கள்
-
இந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு, ‘Get Status’ என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்
-
நீங்கள் Beneficiary status -க்கு நேரடியாக செல்ல Click here
மேலும் படிக்க..
அதே இடத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!! - எங்கே தெரியுமா...?