தினமும் ரூ.400யை சேமித்து நீங்களும் கோடீஸ்வரனாக போஸ் ஆபீஸின் சேமிப்புத் திட்டம் கைகொடுக்கிறது.
பாதுகாப்பான சேமிப்பு (பாதுகாப்பான சேமிப்பு)
தபால்துறையின் சேமிப்பு என்பது வெறும் சேமிப்பு மட்டுமல்ல, நம் எதிர்காலத்திற்கு மிகவும் பாதுகாப்பான நல்ல பலனைத் தருவது.
எந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் கோடீஸ்வர்ராக முடியும் என்பதை தெரிந்துக் கொண்டால் அனைவரும் கோடீஸ்வரராவது உறுதி.
சூப்பர் திட்டம் (Super project)
தபால் துறையின் இந்த சேமிப்புத் திட்டங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். வட்டி குட்டி போட்டு கோடிக்கணக்கில் அதிகரித்துவிடும் வாய்ப்புகள் கொண்ட திட்டங்களும் தபால்துறையில் இருக்கிறது.
இந்த பட்டியலில் பொது வருங்கால வைப்பு நிதி, PPF தொடர்ச்சியான வைப்புத்தொகை RD, தேசிய சேமிப்பு சான்றிதழ் NSC மற்றும் குறிப்பிட்டக் காலம் வரை பணத்தைப் போட்டு வைக்கும் Time Deposit (TD) திட்டம் ஆகியவை அடங்கும். PPFஇல், முதலீட்டாளர் ஆண்டுதோறும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்.
அதாவது மாதத்தில் நீங்கள் அதிகபட்சமாக 12,500 ரூபாய், தினமும் 400 ரூபாய் வீதம் டெபாசிட் செய்யலாம்.
முதிர்வு ஆண்டுகள் (Maturity years)
இந்த திட்டத்தின் முதிர்வு 15 ஆண்டுகள் என்றாலும் நீங்கள் 5-5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில், தற்போது, வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாகும். ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் 25 ஆண்டுகள் சேமித்தால், உங்கள் மொத்த முதலீடு 37,50,000 ரூபாய் ஆகும்.
முதிர்வுத் தொகை (Maturity amount)
25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுக்கான தொகை 1.03 கோடி ரூபாயாக இருக்கும். கூட்டு வட்டியின் பலன் உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்கிவிடும்.
டைம் டெபாசிட், அதாவது எஃப்.டி.யில் டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. தபால் நிலையத்தில் 5 ஆண்டு வைப்புத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட் தொகை 15 லட்சம் என்றால் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவீதம். எனவே நீங்கள் 30 ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம்.
மேலும் படிக்க...
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
SBI வங்கியில் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?- விபரம் உள்ளே!
நாயைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசு!