கொரோனா நெருக்கடியால், கைநிறைய சம்பளம் தந்த சென்னைக்கு திரும்பி வரமுடியாமல், சொந்த ஊரில் செட்டில் ஆனவரா நீங்கள்? கிராமத்தில் இருந்தாலும், சொந்தமாக உழைத்து, நிறைய காச பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும். அதற்கான வழிகள் உங்களுக்காக இங்கு பட்டியலிடப்படுகிறது.
கிராமத்திலேயே அநேக தொழில்கள் இருந்தாலும், லட்சங்கள் ஈட்டும் தொழில் என்றால் அது விவசாயம்தான். இதனை யாரும் மறுக்க முடியாது. அதுவும் அதிக நிலப்பரப்பில் கடினமாக உழைத்தால், கூடுதல் லாபத்தை ஈட்ட முடியும்.
எந்த தொழில் செய்யலாம் (What Business)
உங்களிடம் நிலம் இல்லை, பெரிய முதலீடு இல்லை என்றாலும் கவலை விடுங்கள். வேண்டாம் என தூக்கி எறியும் பொருட்களைக் கொண்டு நீங்களும் தொழில் தொடங்கலாம்.
அந்த வகையில் மாட்டு சாணம், தேங்காய் சிரட்டைகள், வேப்பங்குசிகள், வேப்ப இலைகள் மற்றும் சில இலைகள், மரக்கட்டைகள். இதில் உங்களின் வேலைப்பாட்டை காட்டுவதன் மூலம் கொளுத்த லாபம் அடையலாம்.
கரி தூள் (Charcoal Powder)
காசைக் கரியாக்காதீங்க என்று கூறுவார்கள். ஆனால் தேங்காய் மட்டையில் இருந்து கரியை( Charcoal powder)கரித்தூளாக மாற்றி விற்பனை செய்தால், நல்ல லாபம் ஈட்டலாம். எவ்வளவு தெரியுமா? 100 கிராம் கரித்தூளை ரூ.100க்கு விற்பனை செய்கின்றன பல முன்னணி நிறுவனங்கள்.
இதில் “Activated Carbon” உள்ளதால் இதை பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. இணையத்தில் இதை தேடினால் இதுவும் விற்பனையில் உள்ளதை காணலாம்.
எனவே நீங்களும் கரித் தூளை பொட்டலம் போட்டு, அதற்கான விலையை நீங்களே நிர்ணயம் செய்து இணைய சந்தையில் விற்பனை செய்யலாம்.
தேங்காய் சிரட்டை (Coconut shell)
தென்னை மரங்கள் அதிகம் உள்ள ஊர்களில், தேங்காய் சிரட்டைகள் எளிதில் கிடைக்கலாம். தேங்காய் சிரட்டைகளை நேரடியாக யாரும் வாங்க மாட்டார்கள். ஆனால் அதில் உங்களின் கை வண்ணங்களை காண்பித்து Coconut Shell Products என்ற பெயரில், உள்ளூரிலேயே விற்கலாம். முழுக்கு முழுக்க உங்களின் கற்பனையை தூண்டும் வேலையாகும் இது. அதுவும் பெண்களுக்கு உகந்த வேலையாகும்.தேங்காய் சிரட்டையில் வளையல்கள், குடுவைகள், கரண்டிகள், சிறு பாத்திரம் இன்னும் ஏராளம்.
முருங்கை இலை பொடி (Murunga leaf powder)
எல்லா இடங்களிலும் முருங்கை மரங்கள் பச்சைப்பசேல் என வளர்ந்திருக்கும். கிராமமக்களுக்கு இது தூசியாகக் கடைக்கும் பொருள். ஆனால் நகர மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் பொக்கிஷம். அதனால், முருங்கை இலைகளைப் பொடியாக மாற்றி, மதிப்புக்கூட்டப்பட்டப் பொருளாக மாற்றி விற்பனை செய்யலாம்.
முருங்கை மட்டுமல்லாமல், சில மூலிகை சார்ந்த, உண்பதற்கு தகுந்த இலைகளை பொடி செய்து விற்கலாம்.
மாட்டு வரட்டி
மாட்டு சாணம் கிராமங்களில் எளிதில் கிடைக்கும் பொருள். எனவே அதனை ஒட்டுமொத்தமாக வாங்கி, கண்கவர் பாக்கெட்டுகளில் அடைத்து இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம். இதற்கான மூலப்பொருளும் எளிதாகவே கிடைக்கும். உழைத்தால் மட்டும் போதும். வேறெந்த முதலீடும் இல்லை. லாபம் மட்டுமே.
வேப்பங்குச்சி
ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பது போல் வேப்பங்குச்சியால் பல் துலக்கினால், பற்கள் கற்கள் போல் வலுவாகும். எனவே இந்த வேப்பங்குச்சியை விரும்புவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. இதனை சிறு சிறு துண்டுகளாக சரி சமமாக வெட்டி அதனை பாக்கெட் செய்து விற்றால், நல்லதொரு லாபத்தை அடையலாம். கூடவே அதன் மருத்துவ குணத்தை பாக்கெட் மீது ஒரு காகிதத்தில் எழுதியும் விற்பனை செய்யலாம். அதனால் வாங்குவோருக்கு நல்ல விழிப்புணர்வாகவும் அமையும்.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் தரமான பருத்தி விதைகள் தேர்வு
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யக் காலஅவகாசம்- நவம்பர் வரை நீட்டிப்பு!