News

Thursday, 10 September 2020 05:39 PM , by: Elavarse Sivakumar

சேமிப்பின் உன்னதத்தை, மகத்துவத்தை, கொரோனா நெருக்கடிக் காலம் நம்மில் பலருக்கு உணர்த்திவிட்டது. வந்த வருமானம் அனைத்தையும் அப்படியே ஜாலியாக செலவு செய்துவிட்டு சுகவாசியாக வாழ்ந்தவர்களை, இந்த கொரோனா காலம் திண்டாடத்தான் வைத்துவிட்டது.

அதனால் இனியாவது சேமிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு அஞ்சலகத்தின் இந்த வைப்புத்தொகைத் திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கும். அதிலும் குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் ஈட்டித்தரும் சேமிப்பு என்றால், அது இந்தத் திட்டம்தான்.

செய்யும் முதலீட்டிற்கும் பாதுகாப்பு உண்டு. வாக்குறுதி அளிக்கப்பட்ட உறுதித்தொகையிலும் மாற்றம் இருக்காது. எனவே எவ்விதத் தயக்கமும் இன்றி முதலீடு செய்யலாம்.

தொடர் வைப்பு நிதி (Benefits of Recurring Deposit (RD))

அஞ்சலகங்களில், தொடர் வைப்பு நிதி எனப்படும் Benefits of Recurring Deposit (RD) டில் சிறியத் தொகையைக்கூட நம்மால் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்திற்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இது பிற வங்கிகள் வைப்புநிதிக்காக அளிக்கும் வட்டியைக் காட்டிலும் அதிகம். இதில், நாள் ஒன்றுக்கு 100 ரூபாயைக் கூட உங்களால் முதலீடு செய்ய முடியும். 

எவ்வளவு செலுத்தவேண்டும்(How much)

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு 10 ஆண்டுகளுக்கு செலுத்தினால், ஆண்டுக்கு 5.8% வட்டியுடன் உங்களுக்கு 8 லட்சத்து 14 ஆயிரத்து 481 ரூபாய் கிடைக்கும். அதாவது நீங்கள் செலுத்தும் தொகை 6 லட்சம் ரூபாய். உங்களுக்கு வட்டித்தொகையாக மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 481 ரூபாய் கிடைக்கிறது.

கணக்கு துவங்குவது எப்படி?

அஞ்சலக தொடர் வைப்பு நிதித்திட்டத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முதலீடும் உண்டு.  இதற்கு 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு காலாண்டும் மத்திய அரசு வெளியிடும். இந்தத் திட்டத்தில் குறைந்த பட்ச வைப்புத் தொகையாக ரூ.100யைக் கூட செலுத்தலாம். அதேநேரத்தில், ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படும் வட்டிக்கு ஏற்ப முதிர்வுத்தொகை மாற வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க...

ஒரே ப்ரிமியம் - ஆயுள் வரை ஓய்வூதியம்!

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமா? 59 நிமிடங்களில் கடன் பெறலாம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)