இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 October, 2022 7:27 PM IST
Sleep

உறங்கும் போது அருகில் மொபைல் போன்களை வைத்திருக்கக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த தவறை பலரும் செய்கின்றனர். அலாரம் வைப்பதற்கும், நேரம் பார்ப்பதற்கும், அழைப்பு வந்தால் உடனே எடுப்பதற்கும், முக்கிய குறுஞ்செய்திகளுக்கும் என பல்வேறு காரணங்களுக்காக உறங்கும் போது மொபைல் போன்களை அருகிலேயே வைத்து கொண்டு தூங்குகிறோம். ஆனால் முன்பே குறிப்பிட்டதுபோல, இதனால் பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. தூங்கும்போது மட்டும் அல்லாமல் தலையணைக்கு அடியில் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு உறங்குவது என்பது ஆபத்துதான். நேரத்தில் வெளியாகும் ரேடியேஷன்களால், உடலில் உள்ள செல்கள் தூண்டப்படும். இதனால் ஆண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு இது ஒரு காரணமாக உள்ளது. உங்களுக்கு அருகில் குழந்தைகள் படுத்து தூங்கினால், அவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும். தூங்கும் போது அருகில் போனை வைத்துக்கொண்டு அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூக்கமின்மை

இன்றைய காலத்தில் பலரும் நிறைய நேரம் உழைக்க வேண்டிய தேவை உள்ளது. அப்படி உழைப்பவர்களுக்கு தூக்கம் அருமருந்தாகும். அந்த நேரத்திலும் படுக்கைக்கு போனை எடுத்துக் கொண்டு வருவது என்பது பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளை உருவாகக்கூடும். போனை வைத்துக்கொண்டு படுத்தால், நீண்ட நேரம் நிம்மதியாகத் தூங்க முடியாது. இடையில் அழைப்பு வந்தாலோ, குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் நோட்டிபிகேஷன் வருவதன் காரணமாகவும் உறக்கம் தடைபடும். நிம்மதியாக உறக்கம் இல்லாவிடில், அடுத்தநாள் உங்களால் திருப்தியாக பணி செய்ய முடியாது. இதுதொடரும் பட்சத்தில் தலைவலி, கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் அடுத்தடுத்து ஏற்பட காரணமாக அமையும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட்டு விட்டால், அது பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

நெட்வொர்க்கை ஆப் செய்யுங்கள்

தூங்குகையில் அருகில் போன் வைத்திருக்க நேர்ந்தால், முடிந்தவரை நெட்வொர்க்கை அணைத்துவிடுங்கள். இதனால் உங்களுக்கு நோடிஃபிகேஷன்ஸ் வருவது குறையும். ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருப்பின், அது குறுஞ் செய்திகளாக வந்து சேரும். இதை உங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இதர சமூக வலைதள கணக்குகளிலும் தெரிவிக்கலாம். ஆரம்பத்தில் இது கடினமாக தெரிந்தாலும், இரவு நீங்கள் தூங்கச்செல்லும் நேரத்தை உங்களுடைய சுற்றத்தார், நண்பர்கள், இதர முக்கியமானவர்கள் தெரிந்து கொள்வர். இதன் காரணமாக நீங்கள் தூங்குகையில் உங்களை போனில் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருப்பின், அது உங்களுக்கு அழைப்புகள் வந்து சேரும். உடையிலும் போன்களை வைக்கக் கூடாது

தூங்கும் போது நீங்கள் அணிந்திருக்கும் பேண்ட், ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற எதிலும் போன் வைக்கக்கூடாது. தூங்கச் செல்லும் போது ஆண்கள் பலர் தங்களுடைய பேண்ட் பாக்கெட்டுகளில் போன்களை வைக்கும் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதை தொடரும் பட்சத்தில் உங்களுடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் போனில் இருந்து வெளியாகும் வெப்பமானது, உடலுக்குள் இருக்கும் செல்களை அளிக்கக்கூடும். நீங்கள் பிறப்புறுப்புக்கு அருகில் போனை வைத்துக்கொண்டு உறங்கினால், அவ்வுறுப்பு சார்ந்த இயக்கம் பாதிக்கப்படும். அதேபோல சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு உறங்கினால் மன அழுத்தம் ஏற்படும். மேலும் உடலில் சோர்வு தன்மையை அதிகரிக்கும்.
மலட்டுத்தன்மை உருவாகலாம்

இரவில் செல்போன்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம், அதிக நேரம் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு மலச்சிக்கல், ஆண்மை குறைபாடு மற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்தது. இது தொடரும் பட்சத்தில், குறிப்பிட்ட பிரச்சினைகள் நாள்பட்ட உடல் கோளாறாக மாறி பல்வேறு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். சில சமயம் குறிப்பிட்ட உடல் உடல்நலப் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் முடியவும் வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:

உடல் எடை குறைய முட்டை வெள்ளை கரு

ஜன் தன் அக்கௌண்டில் ரூ.10 ஆயிரம் வந்துச்சா?

English Summary: Are you someone who sleeps with a cell phone next to you?
Published on: 27 October 2022, 07:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now