மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுவதால் அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, நடந்தே தன் அலுவலகத்துக்கு சென்றார். தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படி, மாசற்ற அலுவலக வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நடைபயணம் (Walking)
அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள், தனி நபர்கள் மோட்டார் வாகனங்களை தவிர்க்குமாறு தலைமை செயலர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, அரியலுார் கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று காலை 10:00 மணியளவில், தன் முகாம் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நடை பயணமாக (Walking) வந்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர், டபேதார் உள்ளிட்டோரும் அவருடன் நடந்து வந்தனர்.
மாசற்ற அலுவலக வாரம் (Pollution free Office Week)
மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள், மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெளி இடங்களில் இருந்து வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சைக்கிளில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ரூ.39 கோடி ஒதுக்கீட்டில் 1.77 கோடி மரக்கன்றுகள் நட தமிழக அரசு முடிவு!
வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!