சென்னையில், 10 ஆயிரத்து 675 தெருக்களில் வசிப்பவர்களிடம் கொரோனா தொற்று பரவி உள்ளது. தற்போது, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஞாயிறு முழு ஊரடங்கு (Sunday Lockdown), இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் சில நாட்களாக தொற்று பரவல் வேகம் குறைந்து வருகிறது. இதனால் அடுத்தடுத்த பண்டிகையால் தொற்று கணிசமாக உயரும் என்ற பீதி நீங்கி உள்ளது.
தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக, சென்னையில் இருந்து ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர், சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும், ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு காரணமாக, மக்கள் ஒன்றாக கூடும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் தடைப்பட்டன. மேலும், பொதுமக்களும், வீடு, அலுவலகம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு மட்டும் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், சென்னையில் சற்று குறைய துவங்கிய கொரோனா பாதிப்பு, கிராமங்களில் அதிகரித்து வருகிறது.
குறைந்தது தொற்றுப் பரவல் (Reduced Corona Spreading)
மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னையில் கொரோனா பாதித்தவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகிறோம். குறிப்பாக, ஒருவர் சாதாரண காய்ச்சலுக்கு, அருகில் உள்ள மருத்துவமனை அல்லது கிளினிக் சென்றாலும், அவரின் விபரம் பெற்று, அவருக்கு மாநகராட்சி சார்பில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், பரிசோதனை முடிவுக்கு முன், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.
முகக் கவசம் (Face Mask)
தற்போதைய சூழலில், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறைவது மக்களின் ஒத்துழைப்பில் தான் உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு, உணவு, தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றாலும், முக கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். மாநகராட்சி சார்பில் வழங்கப்படும், பாராசிட்டாமல், வைட்டமின் சி, ஜின்க் ஆகிய மாத்திரைகளை, தொற்று பாதித்தவருடன் வீட்டில் இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
அதிர்ச்சி தகவல்: 5 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவர்!