திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் குறைந்து தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் மக்களிடம் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் 37 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 36 ஆயிரத்து 800 க்கு மேற்பட்டோர் குணமாகினர். 665 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தினமும் குறைந்தது 500 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.
சில வாரங்களாக தொற்று இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாறி உள்ளது. அதேநேரம் முன்புபோல் மக்கள் இப்போது முகக்கவசம் அணிவது இல்லை. இதேபோல் தடுப்பூசி செலுத்துவதில் இருந்த ஆர்வமும் மக்களிடம் குறைந்து விட்டது.
தடுப்பூசி (Vaccine)
இதுவரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணையில் 18,27,000, 2வது தவணையில் 15,94,000பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 15--18 வயதிற்கு உட்பட்டவர்களில் முதல் தவணை 81,000, 2வது தவணை 61,000, 12--14 வயதிற்கு உட்பட்டவர்களில் முதல் தவணை 59,000, 2வது தவணை 36,000 பேர் செலுத்தி உள்ளனர்.
3 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் உள்ளனர். மே 8ல் நடந்த 3 ஆயிரம் முகாமில் முதல் தவணை 8,381, 2வது தவணை 41,437 பேர் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் 2,445 பேர் மட்டுமே செலுத்தினர். கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை மக்கள் தடுப்பூசி செலுத்தி பாதுகாப்போடு இருப்பது அவசியம்.
விழிப்புணர்வு (Awareness)
கொரோனாவை அழிக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து 750 நாட்களுக்கு மேல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிக்க மரக்கன்று வழங்கி ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போட வைத்துள்ளேன். கொரோனா நம்மை விட்டு முழுமையாக நீங்கவில்லை. தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் முன்பு இருந்தது போல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறிய அலட்சியமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மேலும் படிக்க
கொரோனா புதிய அலைக்கு வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!