வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்ட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மழைநிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேகமூட்டம் (Cloudy)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forcast)
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழையும் பதிவாக வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to Fishermen)
இன்று முதல் 21ம் தேதி வரை, கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும், தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும், அந்தமான் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் மணிக்கு 45-53 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 20-9-20ம் தேதி இரவு 11.30 மணி வரை, கடல் அலைகள் 3.5 முதல் 4. 5 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பக் கூடும்.
எனவே குறிப்பிடப்பட்ட இந்தப் பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!