விவசாயிகள் போராட்டம் 2 மாதங்களாகத் தொடரும் நிலையில், டெல்லியின் சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் நோக்கில், இரும்பு கம்பிகளால் தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் திருத்தச் சட்டம் (Agricultural Amendment Act)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநில விவசாயிகள் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தைத் தோல்வி (Talks Failed)
இதனிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், விவசாயிகளுடன் இதுவரை 11 சுற்றுகளாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
வன்முறை (Violence)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், இரண்டு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்தனர்.பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.
தடுப்புச் சுவர் (Barrier wall)
இதற்கிடையே, போராட்டத்தை தீவிரப்படுத்த, விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிகத் தடுப்புச் சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர். மேலும், உடைக்க முடியாத வகையில், சிமென்ட் பயன்படுத்தியும், இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை, திட்டமிட்ட சதிச் செயல், போராட்டத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, வெற்றி பெறாது. தடுப்புச் சுவர் அமைத்தாலும், விவசாயிகள் குவிவதை தடுக்க முடியாது' என்றனர்.
மேலும் படிக்க...
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!