நாடு முழுவதும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகையை பெற சில ஆவணங்களை பதிவேற்றுவது கட்டாயம் என தேசிய ஓய்வூதிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆவணங்கள் பதிவேற்றம்
நாடு முழுவதும் அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஓய்வு காலத்திற்கு பின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வெளியான அறிவிப்பின் படி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் பயனாளர்கள் ஓய்வூதியம் அல்லது மொத்த தொகையை பெற சில ஆவணங்களைப் பதிவேற்றுவது கட்டாயமாகும்.
அந்த வகையில் சந்தாதாரர்கள் NPS வெளியேறுதல்/ திரும்பப் பெறுதல் படிவம், திரும்பப் பெறுதல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று, வங்கி கணக்கு ஆதாரம், PRAN அட்டையின் நகல் போன்றவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது சந்தாதாரர்களின் நலனுக்காகவும், வருடாந்திர வருமானத்தை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதால் இந்த நடைமுறையை கட்டாயமாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தேசிய பென்சன் திட்டம்: பயனாளிகளுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!