நாடு முழுவதும் ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆதார் - ரேஷன் கார்டு இணைப்பு
இந்தியாவில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இலவசமான பொருள்கள் வாங்கி கொள்ளலாம். இந்த சலுகையை பெற ரேஷன் அட்டை உடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். இந்நிலையில் இதனை செய்ய மார்ச் 31, 2023 ஆம் ஆண்டு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் ரேஷன் அட்டையை இணைக்க கடைசி தேதி மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
அதன் படி ஜூன் 30, 2023 தேதிக்குள் ஆதார் அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க வேண்டும் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பல முறை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இனி நீட்டிக்க வாய்ப்பு இல்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் ஆதார் அட்டையை, ரேஷன் கார்டு உடன் இணைத்த பின் அவர்களின் பங்கு உணவு தானியங்கள் கிடைக்கிறதா இல்லையா என எளிதாக தெரிந்து கொள்ளலாம் என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
TNPSC: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வர்கள் மகிழ்ச்சி!
இவர்கள் மட்டும் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை!