மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 January, 2023 4:17 PM IST
SBI Bank

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக கருதப்படும் எஸ்பிஐ வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது..அந்த வகையில் கட்டணமில்லா டோல் ஃபிரீ நம்பர் மற்றும் SMS வசதி மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளை பெறலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் பேங்கிங், மொபைல் சேவைகள், வங்கிக்கணக்கு பேலன்ஸ் விவரங்கள் மற்றும் மினி-ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை மிஸ்டு கால் மூலமோ அல்லது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது மூலமோ பெறலாம்.

புதிய தகவல்(New Information)

எஸ்பிஐ விரைவு வங்கி (Quick Banking), மிஸ்டு கால் பேங்கிங், எஸ்எம்எஸ் பேங்கிங், மொபைல் & நெட் பேங்கிங் போன்ற பல்வேறு வழிகளில் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ மினி-ஸ்டேட்மெண்ட்டை பெறலாம். எனினும் வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை வங்கியில் பதிவு செய்திருந்தால் மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

NEFT, RTGS, IMPS, UPI போன்ற பல்வேறு முறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனை விவரங்களும் SBI மினி ஸ்டேட்மெண்டில் இருக்கும்.. மேலும் எஸ்பிஐ வங்கியின் மினி ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறலாம்.

மிஸ்டு கால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் எஸ்பிஐ மினி ஸ்டேட்மெண்ட்டை எப்படி சரிபார்ப்பது..?

  • SBI மினி ஸ்டேட்மென்ட் பெற 09223866666 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
  • இரண்டு ரிங்கிற்கு பிறகு அழைப்பு துண்டிக்கப்படும்.
  • SBI மினி ஸ்டேட்மென்ட் தொடர்பான SMS வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.. அதாவது அவரின் கணக்கிலிருந்து மேற்கொள்ளப்ப சமீபத்திய 5 பரிவர்த்தனைகள் தொடர்பான விவரம் இருக்கும்..

எஸ்பிஐ எஸ்எம்எஸ் வங்கி மற்றும் மொபைல் சேவைகளுக்கு எவ்வாறு பதிவு செய்வது..?

  • எஸ்எம்எஸ் மற்றும் மொபைல் சேவைகளைப் பெற, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு எண்களை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கான பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணுக்கு 'REG Account Number' என SMS அனுப்ப வேண்டும்.
  • அந்த SMS வெற்றிகரமாக இருந்தாலோ அல்லது தோல்வியுற்றாலோ வாடிக்கையாளர் உறுதிப்படுத்தல் செய்தியை (confirmation message) பெறுவார்.
  • இவை அனைத்தையும் தவிர, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், எஸ்பிஐ கிளை, பாஸ்புக் மற்றும் ஏடிஎம்எஸ் போன்ற அனைத்து தரவுகளையும் நெட் பேங்கிங் சேவை மூலம் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நற்செய்தி: ஏப்ரல் முதல் பேருந்தில் பயணிப்பது ஈசி!

PF உறுப்பினர்களுக்கான முக்கிய அப்டேட்: இந்த வசதிகள் எல்லாம் இனி கிடைக்கும்!

English Summary: Attention SBI customers.. You can get new information through missed call, SMS.
Published on: 27 January 2023, 04:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now