News

Saturday, 30 July 2022 03:10 PM , by: T. Vigneshwaran

Holiday

ஈரோடு மாவட்டத்தில் இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பல அரசியல் தலைவர்கள் அவருடைய உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவருடைய நினைவு நாள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

மேலும் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையானது மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கு செல்லுபடி ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை என்பதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ஒரே நாடு ஒரு மொழி என்பவர்கள் தான் இந்தியாவின் எதிரி - மு.க ஸ்டாலின்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)