News

Wednesday, 20 November 2019 11:30 AM

வேளாண்மை என்பது காலநிலையை அடிப்படையாக கொண்டது. விதைப்பது முதல் அறுவடை வரை விவசாயிகள் பருவநிலையை அறிந்தே செய்கிறார்கள். இவற்றை மேலும் எளிமையாக்க தமிழ்நாடு  வேளாண் பல்கலைக்கழகம் சிறப்பு செயலி ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் மூலம் தினமும் காலநிலை அறிவிப்புகளையும், பயிர் சார்ந்த அறிவுரைகளையும் வழங்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல் பட்டு வரும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்து பருவமழை விவரங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றை விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கிவருகிறது. மேலும் தானியங்கி வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை செயலியைத் தயார் செய்துள்ளனர்.

செயலியின் செயல்பாடு 

ஒரு மணி நேர இடைவேளையில் அந்தந்த வட்டாரங்களில் நிலவும் வெப்பநிலை, மழையளவு, காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை, காற்றின் ஈரப்பதம், மண்ணின் வெப்பநிலை மற்றும் ஈரம், இலையின் ஈரம், காற்றழுத்தம், சூரிய ஒளி ஆகிய 10 வேளாண் வானிலை தகவல்களை தானியங்கி வானிலை அறிவிப்பின் மூலம் சேகரித்து இணையதளத்தில் பதிவிடப் படும். விவசாயிகள் இந்த மென்பொருளில் தங்களின் கைபேசி எண்ணைப் பதிவு செய்தால் அவர்களுக்கு தேவையான விதைப்பு, அறுவடை சார்ந்த குறுந்தகவல்களை அனுப்பி வைத்து விடும்.

செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • வானிலை முன்னறிவிப்புத் தகவல்கள் எண் கணித கட்டமைப்பினை பயன்படுத்தி கொடுக்கப் படுகிறது. எனவே தகவல்கள் 70 - 80 சதவீதம் மட்டுமே சரியானதாக இருக்கும்.
  • கொடுக்கப்படும் வானிலை சார்ந்த வேளாண் தகவல்கள் ஒவ்வொரு விவசாயியின் இடம் பயிர் மற்றும் பயிரின் பருவம் ஆகியவற்றினை பொறுத்து மாறுபடும்.
  • இந்த செயலி விவசாய வேலைகளை திறம்படச் செய்ய உதவும் சாதனமே. இதனை பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் பயனாளிகளின் சொந்த விருப்பம்.
  • வேளாண் சார்ந்த எந்த இழப்பீடுகளும் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் பொறுப்பேற்காது மற்றும் வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மீது எந்த சட்டப்ப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.

Thanks: TNAU

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)