மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கும் கடைசி குழுவாக இந்த 7 வது ஊதியக்குழு அமையும் என்று எதிர் பார்க்கபடுகிறது. தற்போது, அவ்விடத்தில் அய்கிராய்ட் ஃபார்முலா (Aykroyd formula) எனப்படும் புதிய அமைப்பை பயன்படுத்த உள்ளதாகவும் மேலும் இப்புதிய சூத்திரமானது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை சரி செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அய்கிராய்ட் ஃபார்முலா
அய்கிராய்ட் ஃபார்முலா (Aykroyd formula) "நாங்கள் முயற்சித்த ஊதிய கட்டமைப்பின் அடிப்படையாக உள்ளது. நாட்டின் அடிப்படை மற்றும் வாழ்க்கைச் செலவுகளை இது பிரதிபலிக்கிறது. வாழ்க்கையின் அத்யாவசியங்களை முறையாக பெறுவதற்காகவே இம்முயற்சியானது மேற்கொள்ளப்டுகிறது".
அய்கிராய்ட் சூத்திரத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அவர்களின் பணவீக்கம் மற்றும் செயல்திறனுடன் இணைக்கப்படும். இந்த சூத்திரமானது ஊட்டச்சத்து, உணவு மற்றும் வேளாண் அமைப்பு அல்லது FAO யின் முதல் இயக்குனராக இருந்த ஊட்டச்சத்து நிபுணரான "வாலஸ் ருடெல் அய்கிராய்ட்டின்" (Wallace Ruddell Aykroyd) பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்தியர்களின் உணவு & ஆடை போன்ற தேவைகள் மற்றும் சாமானியர்களை பாதிக்கக்கூடிய பொருட்களின் விலை மாற்றங்களையும் அய்கிராய்ட் தனது பரிந்துரைகளின் அடிப்படை கவனமாக கொண்டார். இம்முறையானது வாழ்க்கையின் அத்தியாவசியங்களைப் பெற, ஊதிய தொகுப்பை உருவாக்க உதவுவதாகும்.
குறைந்த பட்ச ஊதியம்
7 வது சிபிசி யின் முறையான ஆவணங்களின் படி அய்கிராய்ட் சூத்திரத்தின் அடிப்படையில் "அனைத்து தொடர்புடைய காரணிகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்தில் குறைந்த பட்ச ஊதியமாக மாதத்திற்கு ரூ 18,000/- ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்படுகிறது".
ஊதிய அமைப்பின் செயல்முறை
புதிய ஊதிய கட்டமைப்பின் கீழ், "தற்போதைய ஊதியக் குழுக்கள் மற்றும் தர ஊதியம் விநியோகிப்பதற்கு புதிய ஊதிய அணி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தர ஊதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களின் நிலை இப்போது ஊதிய அணி மூலம் தீர்மானிக்கப்படும்" என்று 7 வது சிபிசி ஆவணம் கூறுகிறது.
இத்துடன், பொதுமக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவ செவிலியர் ஆகிய சேவைகள் தனி ஊதிய அணிக்குள் (Pay Matrix) செய்யப்பட்டுள்ளன. தற்போது, புதிய நிலைகள் அறிமுகப் படுத்தப்படவில்லை அல்லது எந்த நிலைகளும் வழங்கப்படவில்லை. மேலும் அனைத்து நிலைகளும் புதிய கட்டமைப்பில் உட்படுத்தப்பட்டுள்ளன.
K.Sakthipriya
krishi Jagran