இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக அவசியமான ஆவணமாக உள்ளது. அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு திட்டங்களின் பயன்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு (Baal Aadhaar card) வழங்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் எல்லா மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு சேவை விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
பால் ஆதார் கார்டு (Baal Aadhaar card)
தற்போது 16 மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் பால் ஆதார் கார்டு சேவையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் ஆதார் ஆணையம் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் எல்லா மாநிலங்களிலும் குழந்தைகளுக்கான வந்துவிடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். பால் ஆதார் கார்டை பொறுத்தவரை, 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படாது. குழந்தைகளின் படம், இதர விவரங்கள் சேகரிக்கப்பட்டு பெற்றோரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்.
5 வயதுக்கு மேல், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும் படிக்க
100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
ஆதார் கார்டில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!