கொரோனா தொற்று நோய்க்கான ஆயுர்வேத மருந்தினை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமாக்கிவிட முடியும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து
வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கான மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் இதற்கான ஆராய்சிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்திலையில், பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கிட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் ''கோரோனில் மற்றும் ஸ்வாசரி'' (Coronil & Swasari).
இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவம் அறிவித்துள்ளது. இந்த மருந்து கிட்டினை நோயாளிகள் மீது மருத்துவ ரீதியாக சோதனை செய்ததில் இது 100 சதவீத சாதகமான முடிவுகள் தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு பயன்படுத்தும் இந்த ஆயுர்வேத கிட்-ன் ரூபாய் 545 என்று குறுப்பிடப்பட்டுள்ளது.
100% உத்தரவாதம்
இது குறித்து பதஞ்சலி நிறுவனர் யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்குக் கொடுத்தோம். அனைவரும், 100 சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் NIMSம் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளாதகவும், உலகமே எதிர்பார்த்துள்ள மருந்தினை கண்டுப்பிடித்ததில் பெருமை கொள்வதாகவும் பாபா ராம்தேவ் கூறினார்.
அஸ்வகந்தா, அமிர்தவல்லி மற்றும் துளசி ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த ஆயுர்வேத மருந்து தயாரிக்கப்படுள்ளதாகவும், இது ஒரு நாளில் இரண்டு முறை (காலை மற்றும் மாலை) எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் - அமைச்சர் காமராஜ்!
கலப்பினம் இல்லாத பாரம்பரிய நெல் ரகங்கள்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!