இந்தியாவில் மக்கள் பலரும் குடும்பத்துடன் இரயில்களில் பயணம் செய்கின்ற நிலையில், குழந்தைகளுக்கான புதிய விதிமுறைகளை இரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
புதிய விதிமுறைகள்
இந்தியா முழுவதும் அனௌத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் பலரும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்கு கிளம்புகின்றனர். நீண்ட தூரப் பயணங்களுக்கு பலர் இரயில்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் உடன் பயணம் செய்வோருக்கு, புதிய விதிமுறைகளை இரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இந்த விதிமுறைகள் வெகு விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேபி பெர்த் (Baby Perth)
புதிய விதிமுறைகளின் படி இந்த வசதி, 5 வயது வரையுள்ள குழந்தைகள் இரயில் பயணத்தின் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அம்மாவிற்கும், குழந்தைக்கும் தனித் தனியாக பெர்த் வழங்க இரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து இரண்டாவது சுற்று சோதனையை இரயில்வே நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த சிறப்பு வசதிக்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து எந்தத் தகவலும் இன்னமும் வெளியாகவில்லை.
இத்திட்டத்திற்கான சோதனை 2022 ஆம் ஆண்டு மே மாதம் லக்னோ இரயிலில் இருந்து தொடங்கியது. தொடக்கத்தில் சில குறைபாடுகள் இருந்த நிலையில், தற்போது அது மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இரயிலில் முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு இரயில்வே இந்த பேபி பெர்த்தை ஒதுக்கீடு செய்யும். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் குழந்தைகளுக்கான பெர்த்தை அமைக்க பயணிகள் TTE அல்லது இரயில்வே ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். பேபி பெர்த் ஹூக் உதவியுடன் சாதாரண பெர்த்தில் அதனை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
ரேசன் கடையில் அரிசி கோதுமை இனி கிடையாது: காரணம் இதுதான்!
பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!