News

Saturday, 26 September 2020 07:40 AM , by: Elavarse Sivakumar

கால்நடை மருத்துவ அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Veterinary and Animal Sciences University) கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு எனப்படும், பிவிஎஸ்சி (Bvsc) - ஏ.ஹெச் (AH courses) படிப்புகள் உள்ளன. மேலும், உணவு கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் எனப்படும், பி.டெக்., படிப்புகளும் உள்ளன.

ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் (Application Online)

இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.

 

காலக்கெடு நீட்டிப்பு (Date Extended)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய செப்., 28ம் தேதிவரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில், கொண்டு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விதிக்கப்பட்ட காலக்கெடு, அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்படி அக்டோபர் 9ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டுள்ள மாணவ-மாணவிகள், கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் படிக்க...

பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!

PMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)