News

Friday, 19 August 2022 01:16 PM , by: R. Balakrishnan

Electricity

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று (ஆகஸ்ட் 19) இரவு முதல் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மின்சாரம் (Electricity)

மின் உற்பத்தி நிறுவனங்கள் ரூ.5,100 கோடி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதின் காரணமாக, பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு ரூ.926 கோடி பாக்கி வைத்துள்ளது. ராஜஸ்தான் ரூ.501 கோடியும், ஜம்மு காஷ்மீர் ரூ.435 கோடியும், ஆந்திரா ரூ.413 கோடியும், மகாராஷ்டிரா ரூ.382 கோடியும், மத்திய பிரதேசம் ரூ.229 கோடியும், ஜார்க்கண்ட் ரூ.215 கோடியும், பீகார் ரூ.174 கோடியும் பாக்கி வைத்துள்ளன. மேலும் மணிப்பூர் ரூ.30 கோடியும், சத்தீஸ்கர் ரூ.27.5 கோடியும், மிசோரம் ரூ.17 கோடியும் பாக்கி வைத்துள்ளன.

தடை (Ban)

இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களும் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு நிலுவைத்தொகை அதிகமாக உள்ளதால் அந்த மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாநிலங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள தொகைக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். விதிகள் 2022-ன் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: மின்வாரியம் அறிவுரை!

சூரியசக்தி மின்நிலையம் அமைக்க பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)